News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Similar News

News August 23, 2025

அய்யன்கோவிலைட்டில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு.

image

விழுப்புரம் அருகே உள்ள அய்யன்கோவிலைட்டு கிராமத்தில் 25 மண்பாண்டத் தொழிலாளர் குடும்பங்கள், விநாயகர் சதுர்த்திக்காக காகிதக் கூழ் சிலைகளைத் தயாரித்து வருகின்றனர். 2 அடி முதல் 12 அடி உயரம் கொண்ட இந்தச் சிலைகள், மும்பை மாடல், கற்பக விநாயகர், ராஜ கணபதி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உருவாகின்றன. ₹1,000 – ₹23,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்தச் சிலைகள், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

News August 23, 2025

விழுப்புரம்: விபத்துகளில் 2,173 பேர் உயிரிழப்பு.

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 9,168 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 2,173 பேர் உயிரிழந்துள்ளனர். கவனக்குறைவே அதிக விபத்துகளுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்துகளில் உயிரிழப்புக்குக் காரணமான 993 நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. சாலை விதிகளைப் பின்பற்றி விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் எனப் போக்குவரத்து அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News August 23, 2025

விழுப்புரம்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!