News May 1, 2024
ஜூலையில் இடம் மாறும் பிராட்வே பேருந்து நிலையம்

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் வரும் ஜூலை மாதத்தில் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது குறித்து நேற்று தகவல் வெளியான நிலையில் இன்று(மே 1) உறுதியாகியுள்ளது. மேலும், அவ்விடத்தில் ரூ.823 கோடியில் போக்குவரத்து முனையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2025
விரைவில் மின்சார பேருந்து சேவை: சிவசங்கர்

சென்னையில், வரும் ஜூன் மாதம் முதல் மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இன்று (ஏப்ரல் 20) செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையை தொடர்ந்து மதுரையிலும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார். புதிய மின்சார பேருந்துகளை காண பயணிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
News April 20, 2025
சென்னை மாவட்ட அதிகாரிகள் எண்கள்

▶மாவட்ட ஆட்சியர் – 9444131000, ▶ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008132, ▶சிறப்பு துணை கலெக்டர் – 044-25268321, ▶ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) – 044-25268322, ▶உணவு பாதுகாப்பு அலுவலர் – 9442225555, ▶மாவட்ட மேலாளர் (தாட்கோ) – 9445029456, ▶மாவட்ட பின்தங்கிய வகுப்பு நல அலுவலர் – 9445477825, ▶மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் – 7338801253, ▶மாவட்ட வருவாய் அலுவலர் (தபால்) 9842411775.
News April 20, 2025
GST சாலையில் போக்குவரத்து மாற்றம்

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை GST சாலையில், 4 வழிச்சாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், அவ்வழியில் இன்று (ஏப்.20) முதல் 3 நாட்களுக்கு (ஏப்.22) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை செல்லும் வாகனங்கள் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக சேமியர்ஸ் சாலையின் வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்கு சென்று அண்ணா சாலை செல்லலாம்.