News June 4, 2024

ஜூன் 9இல் சந்திரபாபு முதல்வராக பதவியேற்பு

image

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 9இல் பதவியேற்க உள்ளார். ஆட்சியமைக்கத் தேவையான 88 இடங்களைத் தாண்டி, TDP தற்போது 134 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பது, உறுதியாகியுள்ளது. போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 இடங்களில் ஜன சேனா முன்னிலை வகிக்கும் நிலையில், பவன் கல்யாண் எதிர்கட்சித் தலைவராக அமரக்கூடும் எனத் தெரிகிறது.

Similar News

News August 27, 2025

அமெரிக்காவால் பாதிக்கப்படும் துறைகளுக்கு சலுகை

image

அமெரிக்க வரிவிதிப்பால் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் தொழில் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஜவுளி, ஃபர்னிச்சர், வேளாண் பொருள்கள், லெதர் உள்பட பல்வேறு துறையினருக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

News August 27, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News August 27, 2025

CM ஸ்டாலின் குடும்பத்துடன் மோதலா? அமைச்சர் நேரு பதில்

image

திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட பஸ் நிலையம் அருகே, அமைச்சர் நேருவுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாக EPS குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பஞ்சப்பூரில் தனக்கு சொத்து எதுவும் இல்லை என தெரிவித்த நேரு, அப்படி இருந்தால் அரசோ, மக்களோ எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். அதேபோல், CM குடும்பத்துடன் நேருவுக்கு மோதல் இருப்பதாக செய்தி பரவியதையும் அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

error: Content is protected !!