News April 8, 2024
ஜி கே வாசன் பரப்பரை

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் ஏ பி முருகானந்தத்திற்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் மூன்றாவது முறையாக மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைவது உறுதி எனவும் திருப்பூரிலும் பாஜக வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்
Similar News
News August 10, 2025
திருப்பூர்: விஷத்தை முறிக்கும் அற்புத கோயில்!

திருப்பூர், அய்யம்பாளையத்தில் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அய்யனை வழிபட்டால், தீராத நோய்களும், தோஷங்களும் நீங்குமாம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண், பாம்பு விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டதாம். அய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண்னை சிறிது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால்விஷ ஜந்துக்கள் அண்டாது என்பது நம்பிக்கையாக உள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News August 10, 2025
திருப்பூரில் அரசு வேலை நாளையே கடைசி நாள்!

திருப்பூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து நாளை ஆக.11 மாலை 5.00 மணிக்குள் திருப்பூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் மற்றும் விபரங்களுக்கு <
News August 10, 2025
திருப்பூர்: ஜிகே வாசன் குற்றச்சாட்டு!

குண்டடம் பகுதியில் இன்று வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மடத்துக்குளம் பகுதியில் காவலர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் மற்றும் தாராபுரம் பகுதியில் வக்கீல் படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் இந்த ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.