News December 19, 2025

ஜியோ யூசர்களுக்கு புதிய CALLER ID சேவை

image

Truecaller போன்ற CNAP (Caller Name Presentation) என்ற காலர் ஐடி சேவையை ஜியோ விரைவில் தொடங்கவுள்ளது. தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், அந்த எண்ணின் சிம் கார்டு யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ (ஆதார்/ KYC ஆவணங்கள் அடிப்படையில்) அந்த பெயர் திரையில் தோன்றும். இதன்மூலம் அழைப்பாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஸ்பேம், மோசடிகளை கட்டுப்படுத்த இச்சேவை பயனுள்ளதாக இருக்கும்.

Similar News

News December 24, 2025

பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு அறிவிப்பு

image

தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு களைகட்டும். வரும் 2026-ல் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

News December 24, 2025

தேனீயின் விஷம், இனி புற்றுநோய்க்கு மருந்து!

image

உலகம் முழுவதும் பெண்களை அதிகம் பாதிக்கும் <<18629533>>மார்பக புற்றுநோய்க்கு<<>>, தேனீக்களின் விஷம் அருமருந்தாக உள்ளதாக ஆஸி., விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த விஷத்தில் உள்ள ‘மெலிட்டின்’ என்ற வேதிப்பொருள், நல்ல செல்களை பாதிக்காமல், புற்றுநோய் செல்களை மட்டும், குறுகிய காலத்தில் அழிக்கிறது. சிகிச்சையளிக்க முடியாததாக கருதப்படும் புற்றுநோய் செல்களையும் அழிப்பதால், இது மருத்துவ உலகின் வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

News December 24, 2025

லோன் வட்டி விகிதத்தை குறைத்தது Union Bank

image

ரெப்போ வட்டி விகிதத்தை RBI, 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இந்நிலையில், Union Bank of India முக்கிய லோன்களின் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன்படி, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 30 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 7.15% வட்டியில் லோன் கிடைக்கும். வாகனக் கடன் 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 7.50% வட்டியுடனும், தனிநபர் கடன் 160 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.75%-லும் கிடைக்கும்.

error: Content is protected !!