News November 3, 2025
ஜிம்முக்கு போகணுமா? இதெல்லாம் தேவைப்படும்

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நீரேற்றம், சுகாதாரம், உற்சாகம் போன்றவை தேவைப்படும். நீங்கள் ஜிம்முக்கு போக போறீங்களா? உங்களுக்கு சில அத்தியாவசிய பொருட்கள் அவசியம். அவை என்னென்ன பொருட்கள் தேவை என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த டிப்ஸை, கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News November 3, 2025
நவ.5-ல் விஜய்யின் புதிய திட்டம்!

நவம்பர் 5-ல் நடைபெற உள்ள தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இப்பொதுக்குழுவில் தேர்தல் சின்னமாக எதைத் தேர்வு செய்யலாம் என்பதனை ஆலோசித்து முடிவு செய்து, தீர்மானம் போட விஜய் முடிவெடுத்திருக்கிறாராம். மேலும் திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
News November 3, 2025
PM மோடியால் TN-ல் இதை பேச முடியுமா? CM ஸ்டாலின் சவால்

பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக PM மோடி பேசியதற்கு CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். TN-ல் நிறைய வாய்ப்புகள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளதாக பிஹாரிகள் கூறுவதாக தெரிவித்த அவர், பிஹார் மக்களுக்கு தமிழ்நாட்டில் துன்புறுத்தல் எனும் பேச்சை TN-க்கு வந்து PM மோடியால் பேச முடியுமா என சவால்விட்டிருக்கிறார். மேலும், PM என்ற பொறுப்புக்குரிய மாண்பை அவர் இழக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
பாலியல் குற்றவாளிகளை காக்கும் அரசு: அண்ணாமலை

திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறை அதிகாரிகள் வரை பாலியல் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார். <<18183470>>கோவை கல்லூரி மாணவி<<>> கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாலியல் குற்றங்களை தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ திமுக ஆட்சி தவறிவிட்டதாகவும், இதற்கு CM ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


