News April 11, 2025
ஜிப்லி புகைப்படங்கள் – ராமநாதபுரம் காவல்துறை எச்சரிக்கை

“ஜிப்லி படைப்புகளை அங்கீகரிக்கப்படாத செயலிகள், அதிகாரப்பூர்வமற்ற அல்லது பாதிப்பு விளைவிக்கக்கூடிய சேனல்கள் மூலம் பெறும்போது சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது” ஜிப்லியை சுற்றியுள்ள ஆபத்துகளை பயனர்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதிகமாக ஜிப்லி பயன்படுத்தும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்க.
Similar News
News December 17, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச 17) ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, தேனி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
News December 17, 2025
ராமநாதபுரம்: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

கமுதி, காக்கூர், கீழக்கரை, கீழத்தூவல், முதுகுளத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (டிச 17) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக புளியங்குடி, ஆதனகுறிச்சி, கீழகண்ணிசேரி, விலங்குளத்தூர், கீழக்குளம், பெருங்கருணை, கமுதி நகர், மண்டல மாணிக்கம், பசுமபொன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
News December 16, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (டிச.16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.


