News December 6, 2025
ஜார்கண்டிடம் சரணடைந்த தமிழ்நாடு அணி

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்கண்ட் அணியிடம் தமிழ்நாடு வீழ்ந்தது. முதலில் விளையாடிய ஜார்கண்ட் அணியில் குமார் குஷாக்ரா(84), விராட் சிங்(72) ஆகியோர் TN பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் தமிழ்நாட்டுக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சாய் சுதர்சனை தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால், 20 ஓவர்களில் 179 ரன்களை மட்டுமே எடுத்த TN, தோல்வியடைந்தது.
Similar News
News March 27, 2026
அதிமுகவில் 42 புது முகங்களுக்கு வாய்ப்பு

அதிமுக EX மினிஸ்டர்கள், 13 சிட்டிங் MLA-களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், 42 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி-சுதாகர், ஆம்பூர்-வெங்கடேசன், பர்கூர்-கோவிந்தராஜன், செங்கம்-வேலு, வந்தவாசி-ராணி, வானூர்-முருகன், விழுப்புரம்-விஜயா, திருக்கோவிலூர்-பழனிசாமி, தாராபுரம்-சத்தியபாமா, உள்ளிட்ட புது முகங்கள் களமிறங்க உள்ளனர். <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி (திங்கள்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதனை ஈடுசெய்ய ஏப்.18 வேலைநாளாகும். அதேபோல், பங்குனி உத்திர விழாவையொட்டி, ஏப்.1-ல் தென்காசி, நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.