News July 30, 2024
ஜாபர்சாதிக் மனைவி முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து ஜாபர்சாதிக் மனைவி அமீனா பானு மற்றும் சகோதர் முகமது சலீம் விசாரிக்க வேண்டியுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் முன்ஜாமின் கோரிய ஜாபர்சாதிக் மனைவி மற்றும் அவரது சகோதரரின் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
சென்னை: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் உடனே 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 20, 2025
சென்னை மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் சேவைகள் அனைத்தையும் இப்போது நீங்கள் உங்கள் செல்போன் மூலமாகவே பெறமுடியும். பெருநகர சென்னை மாநகராட்சியின் WhatsApp சேவை மூலம் 32க்கும் மேற்பட்ட சேவைகளை எளிதில் பெறலாம். “வணக்கம்” என்று 9445061913 என்ற எண்ணிற்கு தகவல் அனுப்பி உடனே சேவையை பெறலாம். சென்னையில் வசிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த செய்தியை பகிருங்கள்.
News September 20, 2025
சென்னையில் மெட்ரோ QR டிக்கெட் சேவை பாதிப்பு

சென்னை மெட்ரோ ரயில் QR டிக்கெட் பெறுவதில் இன்று காலை முதல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே நேரடியாக கவுண்டர்கள் மற்றும் வாட்ஸப் செயலி மூலமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனவும், சி.எம்.ஆர் அட்டைகள் மூலமாகவும் பயணிக்கலாம் எனவும், நுட்ப வல்லுனர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.