News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்
Similar News
News February 25, 2026
செங்கல்பட்டு: திக்கு முக்காடும் மக்கள்!

கடற்கரை–செங்கல்பட்டு தடத்தில் எழும்பூர் மேம்பாட்டு பணிகளால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் 26 ரயில்கள் குறைக்கப்பட்டதால் பயணியர் அவதி தொடர்கிறது. 208 ரயில்கள் 164 ஆக குறைந்துள்ளன. 20,000 பேர் பேருந்து, மெட்ரோ போன்ற மாற்று போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். எழும்பூர்–பரங்கிமலையிலிருந்து செங்கல்பட்டு வரை 26 சிறப்பு ரயில்கள் ஏப்.5 வரை இயக்கப்படும்.
News February 25, 2026
வண்டலூரில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே பலி!

வண்டலூர் – செங்குன்றம் பிரதான சாலையில் நேற்று மினி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஒட்டியது விபத்திற்கான காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News February 25, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி-24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


