News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். மேலும் குழந்தைகள், பெரியவர்களிடம் செல்போனை கொடுக்கும் போது கனவமாக இருங்க. ஷேர் பண்ணுங்க
Similar News
News April 18, 2025
கிருஷ்ணகிரி ட்ரெக்கிங் பிரியர்களுக்கு சூப்பர் ஸ்பாட்

கிருஷ்ணகிரியில் ட்ரெக்கிங் பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது பிலிகுண்டுலு ராசிமணல் மலையேற்றம். தற்போது வனத்துறை மூலம் பிலிகுண்டுலுவில் தொடங்கி, ராசிமணல் வன முகாம் வரை ட்ரெக்கிங் அழைத்து செல்லப்படுகிறது. இயற்கை எழில் நிறைந்த பயணம் புதிய அனுபவம் தரும். இதற்கு trektamilnadu.com என்ற வலைத்தளத்தில் முன்பதிவு செய்து ட்ரெக்கிங் செல்லலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணி ட்ரெக்கிங் பிளான் பண்ணுங்க
News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கிருஷ்ணகிரியில் காலியாக உள்ள 732 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.<
News April 18, 2025
மத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

மத்தூர் அடுத்து சிவம்பட்டி கிராமத்தில் சக்திவேல் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ் (39), இவருக்கு கடந்த மூன்று மாத காலமாக வயிறு வலி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.