News September 19, 2024
ஜவுளிப் பூங்கா அமைக்க ரூ.2.50 கோடி தமிழக அரசு மானியம்

சிறிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்ட விழிப்புணர்வு கூட்டம் வருகின்ற 25ஆம் தேதி மதியம் 1:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தில் 2 ஏக்கர் பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடம் அமைக்க தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் 50% அல்லது ரூ.2.50 கோடி (இதில் எது குறைவோ அது) தமிழக அரசு மானியம் வழங்குகிறது என ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

இன்று (28-08-2025) இரவு 11:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும் என காவல் துறை X தளத்தில் அறிவித்துள்ளது.
News August 28, 2025
ராமநாதபுரம் பெண்களே NOTE பண்ணிக்கோங்க…

ராமநாதபுரம் மக்களே, எதிர்பாரா நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி மற்றும் பிபிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம SHARE பண்ணுங்க.
News August 28, 2025
ராமநாதபுரத்தில் அரசு வேலை! நாளை கடைசி! உடனே APPLY

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 32 உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் https://www.drbramnad.net/ என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<