News January 16, 2026
ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க விரைந்தார் உதயநிதி!

மதுரை, பாலமேட்டில் இன்னும் சற்றுநேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளது. இதனை DCM உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக காலையிலேயே எழுந்து தயாரான அவர், வாடிவாசலுக்கு விரைந்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் போட்டியானது தொடங்க உள்ளது. இன்று 1,000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் களம் காண காத்திருக்கின்றனர். சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
Similar News
News January 29, 2026
பிப்.2-ல் விஜய் இதை அறிவிக்கிறாரா?

வரும் பிப்.2-ம் தேதியுடன் தவெக தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில், பனையூர் தவெக அலுவலகத்தில் விஜய் தலைமையில் 3-ம் ஆண்டு தொடக்க விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அன்றைய தினம் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
News January 29, 2026
OPS இதற்குதான் ஏங்குகிறார்: KC பழனிசாமி

OPS-க்கு திமுகவில் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா என்பது தெரியவில்லை என KC பழனிசாமி கூறியுள்ளார். உழைத்து மேலே வருபவர்கள் தன்னையே நம்புவார்கள்; அதிர்ஷ்டத்தில் வருபவர்கள் தொடர்ந்து அதிர்ஷ்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்றார். மேலும், 3 முறை அதிர்ஷ்டத்தில் கிடைத்த முதல்வர் பதவி மீண்டும் கிடைக்காதா என OPS ஏங்குவதாகவும் விமர்சித்துள்ளார்.
News January 29, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $431.92 (இந்திய மதிப்பில் ₹39,754) உயர்ந்து $5,518.44-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் $11.94 அதிகரித்து $118.1 ஆக உள்ளது. இதனால் இன்று இந்திய சந்தையில் தங்கம் விலை அதிகமாக உயர வாய்ப்புள்ளது.


