News January 17, 2026
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: CM ஸ்டாலின்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்ட CM ஸ்டாலின், 2 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். *ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி, முதல் பரிசு பெறும் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறையில் அரசு வேலை. *அலங்காநல்லூரில் ₹2 கோடி செலவில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் & உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 4, 2026
வால்நட்ஸை இப்படி தான் சாப்பிடணும்!

வால்நட்டில் ஒமேகா 3, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் உள்ளன. இந்நிலையில், அதை சாப்பிட சில முறைகளை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதன்படி, *உப்பில்லாத வால்நட்களை சாப்பிட வேண்டும் *8 மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும், எலும்புகளை வலுப்படுத்தும் *தினமும் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கும், ரத்த சர்க்கரை அளவு சீராகும் *மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க காலை, மதியம் சாப்பிட வேண்டும்.
News February 4, 2026
நாளை அமைதி பேச்சுவார்த்தை! இன்று ஏவுகணை தாக்குதல்

அபுதாபியில் போர் நிறுத்தம் குறித்து நாளை பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கும் நிலையில், உக்ரைன் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் இரண்டாம் உலகப் போரின் சின்னமான சோவியத் சகாப்த நினைவுச் சின்னம் சேதமடைந்துள்ளது. இதில் சற்று நிம்மதியான செய்தி என்னவென்றால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை; 5 பேர் மட்டுமே காயமடைந்துள்ளனர்.
News February 4, 2026
ராசி பலன்கள் (04.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


