News February 16, 2025
ஜல்லிக்கட்டு போட்டியில் 15 பேர் காயம்

அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட காளைகள் பங்கேற்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மூன்று சுற்றுகள் முடிவில் 15 பேர் காளைகள் முட்டி காயம் அடைந்துள்ளனர். இதில் 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெறுகின்றனர்.
Similar News
News March 6, 2026
மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜிப்மர், இஎஸ்ஐ நிறுவனங்களில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு நர்சிங் அதிகாரி ஆட்சேர்ப்பு பொது தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானது. மொத்தம் 2551 பணியிடங்கள்; இதில் மதுரை எய்ம்ஸ்-ல் 30 இடங்கள் உள்ளன. (GNM டிப்ளமோ அல்லது B.Sc Nursing தகுதி வேண்டும். வயது 18–30. சம்பளம் ரூ.9,300–34,800. கணினி வழித்தேர்வு) கடைசி தேதி 16.03.2026. <
News March 6, 2026
மதுரை: வயலுக்குள் கவிழ்ந்த அரசு பஸ்

வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தான் செல்லும் பாதையில் அரசு பஸ் டிப்போ அமைந்துள்ளது. காலை டிரைவர் மகாலிங்கம் பஸ்சை எடுத்து வெளியே வந்தவர் நிறுத்திவிட்டு சாமி கும்பிட கீழே இறங்கி உள்ளார். எஞ்சின் ஓடி கொண்டிருந்ததால் பஸ் தானாக கிளம்பி எதிரே இருந்த தடுப்பு சுவரை தாண்டி வயல்வெளியில் தலைகீழாக கவிழ்ந்தது. டெப்போவில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக கிரைன் மூலம் பஸ்சை வெளியில் எடுத்தனர்.
News March 5, 2026
மதுரை : வீடு, நில பத்திர உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

மதுரை மக்களே, இங்கு <


