News January 10, 2025
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இணையதளத்தில் பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு அறிவிக்கையின்படி, ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேற்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான இணையதள முகவரியான https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 1, 2026
திண்டுக்கல்: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திண்டுக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News February 1, 2026
திண்டுக்கல்லில் அதிரடி கைது!

திண்டுக்கல், கோவில்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் ராக்காச்சிபுரம் பகுதியில் டூவிலரில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரவிக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த சுமார் 1.120 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
News February 1, 2026
வத்தலகுண்டு: இறந்த கணவர் உடலுடன் வாழ்ந்த மனைவி

திண்டுக்கல், வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியை சேர்ந்து வழக்கறிஞர் ஜெயபாண்டி வயது 72,. இவரது மனைவி மஞ்சுளா தேவி வயது 66. இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசப்படுவதாகவும், வீடு பூட்டி உள்ளதாகவும் வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் வீட்டை திறந்து பார்த்த பொழுது, இறந்த கணவருடன் மஞ்சுளா தேவி இருந்துள்ளார். உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.


