News January 7, 2025
ஜல்லிக்கட்டு காளைகளின் எண்ணிக்கையை அறிவிக்கும் ஆட்சியர்

மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க madurai.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய (ஜன6)நேற்று மாலை 5 மணி முதல் (ஜன.7)இன்று மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பதிவுக்காலம் முடிவடைந்த பின்பு இன்று மாலை 6 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா செய்தியாளர்களிடம் ஆதாரப்பூர்வமாக எத்தனை காளைகள் பங்கேற்க உள்ளது என்பதை தெரிவிக்க உள்ளார்.
Similar News
News January 28, 2026
மதுரை தெப்ப திருவிழா பணிகள் தீவிரம்

மதுரை, தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி, அம்மன் தெப்பத்தில் வலம் வரும் தெப்போத்ஸவம் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, தெப்பக்குளத்தில் மிதவை தெப்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 300க்கும் அதிகமான தகர உருளைகள், நூற்றுக்கணக்கான கம்புகளைக் கொண்டு மிதவைத் தெப்பம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமாா் 30 பணியாளா்கள் இந்தப் பணியை தொடா்ந்து செய்து வருகின்றனர்.
News January 28, 2026
மதுரை : வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
மதுரை பாலத்தில் தூங்கியவர்; தவறி விழுந்து பலி

மதுரை, சோழவந்தான் அருகே முதலைக்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜா ராமன் இவர் நேற்று அந்த கிராமத்தில் உள்ள பாலத்தில் படுத்து தூங்கியபோது எதிர்பாராதவிதமாக பாலத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதனையறிந்த கிராம மக்கள் ராஜாராமனை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அங்கு சிகிச்சை ராஜாராமன் உயிரிழந்தார். இதுக்குறித்து விக்ரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


