News April 16, 2025

ஜல்லிக்கட்டில் பங்கேற்க தாயார் எதிர்ப்பு-மாணவர் தற்கொலை!

image

வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியைச் சேர்ந்த முத்தையா (23) என்பவர் பெரம்பலூரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பயின்று வந்துள்ளார். இவர் பூலாம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்கப் போவதாக வீட்டில் கூறியுள்ளார். இதற்கு அவரது தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்தையா அவரது வயலுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Similar News

News April 21, 2025

பெரம்பலூர்: 10th பாஸ் போதும் ரூ.25,000 சம்பளம்

image

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும்.<> cpcb.nic.in/jobs.php<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். SHARE IT.

News April 21, 2025

அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே (ஏப்.21) கடைசி நாள். எனவே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 21, 2025

லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு – ஒருவர் கைது

image

அரியலூரில் இருந்து அசாம் மாநிலத்துக்கு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்(28) என்பவர் லாரி ஓட்டி சென்றுள்ளார். அவர், பெரம்பலூர் நான்கு ரோடு அருகே லாரியை நிறுத்தியபோது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள், கோகுலிடம் இருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில், 2 பேரில் ஒருவரான தா்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (26) என்பவரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!