News March 13, 2026
ஜல்ஜீவன் திட்ட நிதியை விடுவியுங்கள்: ஸ்டாலின்

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ₹3,112 கோடியை உடனே விடுவிக்க கோரி PM மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 3-வது பகுதிக்கு ஒப்புதல் & நிதியுதவி வழங்குமாறும் CM வலியுறுத்தியுள்ளார். தமிழக கிராமப்புறங்களில் சீரான அளவில் குடிநீர் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 31, 2026
பெட்ரோல், டீசல் விலை.. அதிர்ச்சித் தகவல்

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது ஒரு பேரல் 116 டாலராக உள்ளது. ஈரான் மீது தரைவழி ஊடுருவல் நடத்த அமெரிக்கா படைகளை குவித்து வருவதால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் 60% வரை பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்ட நிலையில், இந்தியாவில் கலால் வரி ₹10 குறைக்கப்பட்டதால் விலை உயரவில்லை. ஆனால், வரும் நாட்களில் இந்தியாவிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
News March 31, 2026
புதிய கருத்துக்கணிப்பில் முந்தும் அதிமுக+

<<19460676>>CNN News18-ன்<<>> புதிய கருத்துக் கணிப்பில், NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் NDA கூட்டணியின் வாக்கு சதவீதம் 38%-ல் இருந்து 40% ஆக உயர்ந்துள்ளது. திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 39% ஆக சரிந்துள்ளது. தவெக வாக்கு சதவீதம் 15% டூ 13%-க்கு சரிந்துள்ளது. தொகுதி அடிப்படையில் திமுக+(104-114), அதிமுக+(115-125), தவெக(2-8) வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.<<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
IPL: பஞ்சாபை சமாளிக்குமா குஜராத்?

IPL-ல் இன்று குஜராத்-பஞ்சாப் அணிகள் முல்லன்பூரில் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங்கில் இரு அணிகளும் சமபலத்துடன் இருந்தாலும் உள்ளூரில் பஞ்சாபை வீழ்த்துவது எளிதல்ல. இரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதி தலா 3 முறை வென்றுள்ளன. இப்போட்டி குஜராத்தின் டாப் 3 பேட்டர்ஸ் கில், சாய் சுதர்ஷன், பட்லர் Vs பஞ்சாபின் டாப் 3 பவுலர்ஸ் அர்ஷ்தீப், யான்சன், சஹால் இடையிலான மோதலாக இருக்கும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.


