News November 15, 2025
ஜம்மு காஷ்மீர் வெடிவிபத்து தற்செயலானது: DGP விளக்கம்

J&K நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்து தற்செயலாக நடந்தது என அம்மாநில டிஜிபி நலின் பிரபாத் தெரிவித்துள்ளார். ஃபரீதாபாத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களின் மாதிரிகளை தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார். இதில், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News November 15, 2025
மாணவர்களுக்கு ₹25,000 வரை உதவித்தொகை

பழங்குடியினர் தொடர்பான ஆய்வு & ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ₹10 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்குகிறது தொல்குடியினர் புத்தாய்வு திட்டம். மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News November 15, 2025
சுந்தர்.சி விலகியது பற்றி கமல் விளக்கம்

ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி பின்வாங்கியது குறித்து கமல் விளக்கமளித்துள்ளார். படத்தில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்பது சுந்தர் சி-க்கு தான் தெரியும் என கூறிய அவர், ஒரு முதலீட்டாளராக எனது நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை படமாக எடுப்பதே எனக்கு ஆரோக்கியம் என கூறியுள்ளார். மேலும், ரஜினிக்கு பிடித்தவர்களிடம் கதை கேட்டு கொண்டிருப்பதாகவும், புதியவர்களுக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை: CM ஸ்டாலின்

தூய்மை பணியாளர்களுக்காக சென்னையில் 200 வார்டுகளிலும் உடைமாற்றும் அறை, கழிப்பறை வசதியோடு, ஓய்வறை கட்டித் தரப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு பல கோரிக்கைகள் இருப்பது தனக்கு தெரியும் என கூறிய அவர், அவை படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், டிச.6 முதல் இலவச உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


