News April 25, 2025
ஜம்மு காஷ்மீர்; உயிர் தப்பித்த 6 பேர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சையத் காஜா பாஷா(55), ராஜா(44) உள்ளிட்ட 6 பேர் காஷ்மீரை சுற்றிப் பார்க்க சென்றிருந்தனர். அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றதை அறிந்து, அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து தமிழக அரசின் உதவியுடன் நேற்று சென்னை வந்தடைந்தனர்.
Similar News
News September 22, 2025
விழுப்புரம்: இந்த முக்கியமான சான்றிதழ் பத்தி தெரியுமா….?

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <
News September 22, 2025
விழுப்புரம்: பங்காளி சண்டை நீக்கும் கோயில்

விழுப்புரம் செஞ்சி சாலையில் உள்ளது திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக உள்ள சிவனை வழிபட்டால் அண்ணன் தம்பி இடையே உள்ள சொத்து பிரச்சனைகள் நீங்கும் என்பது நபிக்கையாக உள்ளது. சொத்து விவகாரத்தில் பொய் சத்தியம் செய்த அண்ணனை இங்குள்ள இறைவன் தண்டித்த காரணத்தால் இந்த நம்பிக்கை உள்ளது. மேலும் குழந்தை வரம் கிடைப்பது ஐதீகமாக இருக்கிறது. இதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
News September 22, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
1.கனகஜோதி மஹால், விழுப்புரம் 2.சிவா மஹால், சூரப்பட்டு 3.வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், வல்லம் 4.பிபிஎஸ் மஹால், டி.பரங்கனி 5.ஊராட்சி மன்ற கட்டிட வளாகம், பெலாகுப்பம் 6.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், வேங்கை
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.