News December 23, 2025
ஜன. 6 முதல் ஜாட்கோ-ஜியோ வேலைநிறுத்தம்

வரும் ஜனவரி 6 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாட்கோ-ஜியோ அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது , புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, நியாயமான ஊதிய விகிதம், நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுகளை அனுமதிப்பது போன்ற கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோவின் ஏற்காததால் ஜன.6 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் அறிவித்துள்ளனர்.
Similar News
News December 25, 2025
சென்னை: மெட்ரோ பயனாளிகளுக்கு அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். அதன்படி, பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மாதவரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சரவணன். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யானைகவுனி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, ஹவாலா பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், உறுதியானதால் அதிகாரிகள் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்தனர்.