News January 19, 2025

ஜன.26-ல் கிராமசபை கூட்டம்: ஆட்சியர் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் இதர பொருட்கள் குறித்து ஆலோசனை செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Similar News

News August 30, 2025

நாமக்கல்: ஆதார் கார்டில் ADDRESS மாற்றமா..?

image

நாமக்கல்: ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
▶️முதலில் இங்கே <>கிளிக் <<>>செய்து, நுழைந்து ஆதார் எண்ணை தந்து Login செய்யவும்.
▶️அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
▶️அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
▶️முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
▶️பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.

News August 30, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.94-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News August 30, 2025

நாமக்கல்: BE, டிப்ளமோ படித்தவர்கள் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே.., மத்திய அரசின் ‘POWER GRID’எனும் நிறுவனத்தில் பணிபுரிய BE, டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. களப் பொறியாளர், மேற்பார்வையாளர் பதவிகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு அந்த நிறுவனம் நடத்தும் பொதுத் தேர்வில் பங்கேற்க இங்கே<> கிளிக் <<>>செய்யவும். செப்.17ஆம் தேதியே கடைசி நாள். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!