News March 29, 2026
ஜன நாயகன அப்புறம் பார்க்கலாம்.. வினோத் முடிவு

பல சிக்கல்களால் ஜன நாயகன் படம் ரிலீஸாகாமல் உள்ளது. இந்நிலையில், மற்ற வேலைகளை பார்ப்போம் என்று H வினோத் அடுத்த படத்திற்கான பணிகளை துவங்கிவிட்டாராம். முதலில் தனுஷை அணுகிய நிலையில் அவரிடம் கால்ஷீட் இல்லையாம். இதனால் சூர்யாவிடம் வினோத் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளாராம். திரைக்கதை அமைக்கும் பணியை துரிதப்படுத்தி, ஜூலையில் ஷூட்டிங் செல்ல வினோத் தயாராகிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News April 4, 2026
புதுக்கோட்டை: புதுமாப்பிளை திடிர் சாவு – சோகம்

கீரமங்கலம், பனங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. ஏற்கனவே இவருக்கு சிறுநீரகக் கோளாறு இருந்து வந்த நிலையில், பனங்குளத்தில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்
News April 4, 2026
பாமகவுக்காக விட்டுக் கொடுத்த சசிகலா

அஇபுதமமுக சார்பில் போட்டியிடும் 4-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை சசிகலா வெளியிட்டுள்ளார். அதில், ஏற்கெனவே அறிவித்த விளாத்திகுளம், உளுந்தூர்பேட்டை தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதேநேரம், வாணியம்பாடி & அரக்கோணம் தொகுதியில் அறிவித்த வேட்பாளர்களை சசிகலா வாபஸ் பெற்றுள்ளார். ஏனெனில், அந்த தொகுதிகளில் கூட்டணியில் உள்ள ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என கூறியுள்ளார்.
News April 4, 2026
தங்கம் வாங்க சரியான நேரமா? வியாபாரிகள் சொல்வதென்ன?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிட்டத்தட்ட பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. ஒரு வாரமாக 1 அவுன்ஸ்(28g) $4,700 என்ற சராசரியில் உள்ளது. மேலும் சில வாரங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என தெரிவித்துள்ள வியாபாரிகள் இது தங்கம் வாங்குவதற்கான தருணம் என்றும் கூறுகின்றனர். சர்வதேச சந்தையில் தற்போது 1 அவுன்ஸ் $23 உயர்ந்து $4,676 ஆக உள்ளது. இதேநிலை நீடித்தால் நம்மூர் சந்தையில் சற்று விலை உயர வாய்ப்புள்ளது.


