News April 10, 2026

ஜன நாயகன் லீக்.. முதல்முறையாக பேசினார்

image

ஜன நாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், ரிலீஸுக்கு முன்பே லீக்காவது மிகப்பெரிய வலியை தருவதாக H.வினோத் வருத்தப்பட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியும் பலரது கனவை சுமந்துள்ளது; லீக்கான காட்சிகளை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஜன நாயகன் பிரச்னைக்கு பிறகு H.வினோத் முதல்முறையாக வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.

Similar News

News April 13, 2026

‘ஜன நாயகன்’ லீக்கானதற்கு L.முருகன் காரணம்: KAS

image

‘ஜன நாயகன்’ படம் லீக்கானதற்கு L.முருகன் காரணம் என செங்கோட்டையன் சாடியுள்ளார். பழனி பிரசாரத்தில் ‘ஜன நாயகன்’ லீக்கானதை சுட்டிக்காட்டிய அவர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் யார் என்பதை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். வரும் தேர்தலில் L முருகன் தோற்கடிக்கப்பட வேண்டும் என பழனி முருகனை வேண்டுவதாகவும், அவரை தோற்கடித்து மீண்டும் டெல்லிக்கு அனுப்ப வேண்டிய கடமை நமக்கு உள்ளதாகவும் பேசியுள்ளார்.

News April 13, 2026

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பானம்!

image

வெண்டைக்காயை கொதிக்க வைத்த தண்ணீரை பருகினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வெண்டைக்காயில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இதனால் மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது இது ரத்த சர்க்கரை அளவில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறதாம். அதன் சாறு, இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, செல்கள் குளுக்கோஸை உறிஞ்சும் திறனை மேம்படுத்துகிறதாம்.

News April 13, 2026

தன் மீதும் தனது தங்கை தனி நபர் தாக்குதல்: CM ஸ்டாலின்

image

தன் மீதும் தனது தங்கை கனிமொழி மீதும் EPS தனி நபர் தாக்குதலை செய்வதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் பிரசாரம் செய்த அவர், Ex முதல்வர் போல பேசவில்லை என்றும், சாமானிய மக்கள் கூட அவரது பேச்சால் முகம் சுளிப்பதாகவும் விமர்சித்துள்ளார். அவரது ஆட்சியின் சாதனைகளை சொல்ல முடியாத காரணத்தால் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!