News January 21, 2026

ஜன நாயகன் ரிலீஸ்.. காலையிலேயே ஹேப்பி நியூஸ்

image

‘ஜன நாயகன்’ பட சென்சார் சான்று தொடர்பான வழக்கை சென்னை HC தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. அதேநேரம், இன்று (அ) நாளை இதுதொடர்பாக தீர்ப்பு வெளியாகும் என விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த 2 நாள்களுக்குள் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்த வாரம் (அ) பிப்ரவரி 2-வது வாரத்தில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Similar News

News February 5, 2026

திமுகவிடம் புதிய டிமாண்ட் வைக்கும் விசிக

image

2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட VCK, இம்முறை திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெற முயற்சிக்கிறது. திருப்போரூர், செய்யூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மட்டுமே களம் கண்ட VCK, தற்போது தெற்கு & மேற்கு மாவட்டங்களையும் குறிவைத்துள்ளது. தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளின் பட்டியலை VCK தயாரிப்பதாகவும், தொகுதிப் பங்கீட்டின் போது திமுகவிடம் டிமாண்ட் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

News February 5, 2026

UGC NET தேர்வு முடிவுகள் வெளியீடு

image

உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வான யுஜிசி நெட் 2025 தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட பாடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 7 லட்சம் பேர் எழுதிய நிலையில், தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. https://ugcnet.nta.nic.in/ தளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பாடவாரியாக கட் -ஆஃப் மதிப்பெண்கள், இறுதி விடைக்குறிப்பு ஆகியவையும் வெளியாகி உள்ளன.

News February 5, 2026

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபத்தில் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $28 (இந்திய மதிப்பில் ₹2,532) உயர்ந்து $5,018-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!