News February 3, 2026
ஜன நாயகன் படம் வந்தால்.. டி. ராஜேந்தர் அதிரடி!

‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. படம் எப்போது வெளிவரும் என்பது தெரியாத நிலையில், ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். இந்நிலையில், பிப். 6-ம் தேதி ‘ஜன நாயகன்’ படம் ரிலீசானால், ரிரிலீசாகும் ‘உயிருள்ளவரை உஷா’ படத்தை தள்ளிப்போடவும் தயார் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். 1983-ல் வெளியான டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 19, 2026
விஜய் பரப்புரை பிளானில் மாற்றம்.. தவெகவினர் உற்சாகம்

வேலூரில் 5,000 பேர் பங்குபெறும் தவெக கூட்டத்திற்கு முதல்முறையாக பந்தல் அமைக்கப்படவுள்ளது. விஜய்யின் சேலம் சந்திப்பில் ஒருவர் வெயில் காரணமாக மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வேலூரில் வரும் 23-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். இந்நிலையில் அங்கு பந்தல் அமைக்கவும், நாற்காலிகளில் தண்ணீர் வைக்கவும் ஏற்பாடு செய்வதால் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
News February 19, 2026
துரோகிகளை வேரறுக்க ஒன்றுபடுவோம்: சசிகலா

எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுக்க ஒன்றாக இணைவோம் என தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் 24-ம் தேதி கமுதியில் பொதுக்கூட்டம் ஒன்று சசிகலா தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த அரசியல் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News February 19, 2026
அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் எழுப்பும் மகன்

தனது தந்தையின் உயிரைப் பறித்த விமான விபத்து குறித்து CBI விசாரிக்க வேண்டும் என அஜித் பவாரின் மகன் ஜெய் பவார் வலியுறுத்தியுள்ளார். விமான விபத்தில் பெரும் தவறுகள் நடந்திருக்கலாம் என்றும், விமானத்தை இயக்கிய VSR Ventures மீது தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதுகுறித்து CBI விசாரிக்கும்படி <<19171519>>அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார்<<>> மகராஷ்டிரா CM-யிடம் நேற்று மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


