News January 21, 2026

‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ்.. வந்தது எச்சரிக்கை

image

‘ஜன நாயகன்’ படத்தின் சென்சார் பிரச்னை தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் OTT உரிமத்தை வாங்கியுள்ள அமேசான் நிறுவனம் போர்க்கொடி தூக்கியுள்ளது. பட ரிலீஸ் தாமதமானதால் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்குமாறு அமேசான் நிறுவனம் கோரியுள்ளதாம். இழப்பீடு வழங்காவிடில் வழக்கு தொடரப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனத்தை எச்சரித்துள்ளது.

Similar News

News February 2, 2026

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண்கள்!

image

பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பலுசிஸ்தான் விடுதலைப் படைக்கும்(BLA) இடையே நடக்கும் <<19026027>>மோதல் <<>> அந்நாட்டில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதில் BLA-வை சேர்ந்த பெண்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெண்கள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டனர். மோதலில் 200 பாக்., ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக BLA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2026

ஒரு கார் ரெஜிஸ்டரேஷன் நம்பருக்கு ₹2.08 கோடி!

image

ஆந்திராவை சேர்ந்த கிரண் என்பவர், ‘DDC 0001’ என்ற வாகன எண்ணை ₹2.08 கோடிக்கு வாங்கியுள்ளார். Big Boy Toyz Auction House நடத்திய ஏலத்தில் வாங்கப்பட்ட இந்த எண்தான், நாட்டின் மிக விலையுயர்ந்த வாகன எண். இதற்கு முன், DL 1C 0001 என்ற எண் ₹1.5 கோடிக்கு ஏலம் போனதே ரெக்கார்டாக இருந்தது. அதிக விலைக்கு கார், பைக் வாங்கலாம்; யாராவது நம்பரை வாங்குவாங்களா என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News February 2, 2026

விஜய் ஊழல்வாதி தானே? திண்டுக்கல் சீனிவாசன்

image

பொது எதிரி என பாஜகவை கூறும் விஜய், அக்கட்சியை விமர்சிக்காதது ஏன் என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சிக்கும் விஜய் ஊழல்வாதி தானே, அவர் சம்பாதித்தது கருப்பு பணமா, வெள்ளை பணமா என சாடினார். மேலும், ஆதவ் அர்ஜுனா நேர்மையான வழியில் சம்பாதித்தாரா என்றும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து சிறை சென்றவர் தானே செங்கோட்டையன் எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!