News March 9, 2026

‘ஜன நாயகன்’ படத்துக்கு இன்று முக்கியமான நாள்!

image

‘ஜன நாயகன்’ படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகாமல் முடங்கியிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் இன்று ரிவைசிங் கமிட்டி படத்தை பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சுமுகமாக முடியும் பட்சத்தில் படம் மார்ச் 19-ல் வெளியாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தினர் சொல்கின்றனர். இது விஜய்யின் கடைசி படம் என கூறப்படுவதால் தேர்தலுக்கு முன் படம் ரிலீசாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Similar News

News April 13, 2026

ஜன நாயகன் படத்தை லீக் செய்தவர்கள் யார் தெரியுமா?

image

ஜன நாயகன் படம் லீக் தொடர்பாக <<19633408>>கைதான 6 பேர்<<>> குறித்த தகவல்களை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் கிளவுட் ஸ்டோரேஜ் தளங்கள் மூலம் விதிகளை மீறி அப்லோடு, டிரைவ் லிங் ஷேர் செய்யும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குற்றத்தில் ஈடுபட்டதற்கான டிஜிட்டல் சான்றுகளை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்திருப்பதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

News April 13, 2026

ஹார்முஸ் நீரிணை முற்றுகை உடனே அமல்: டிரம்ப்

image

ஈரான் – அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிடும் உத்தரவு உடனே அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் ராணுவ பலம் அழிந்துவிட்டதாகவும், ஆயுதங்கள், ஆளில்லா விமானங்கள் தயாரிக்கும் திறன் முறியடிக்கப்பட்டதாகவும் கூறிய அவர், ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமா, இல்லையா என்பது தெரியாது; அது பற்றி கவலையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News April 13, 2026

த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் குவிப்பு

image

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷாவின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. த்ரிஷாவின் வீட்டில் காவலர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. நேற்று ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!