News February 6, 2026

’ஜன நாயகன்’ படத்துக்காக வெயிட்டிங்: தமிழிசை

image

‘ஜன நாயகன்’ படம் வராமல் இருப்பதற்கும் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தமிழிசை கூறியுள்ளார். 2 வருடம் படம் எடுத்துவிட்டு, 30 நாள்களுக்குள் அனுமதி கிடைக்கவேண்டும் என கேட்பதாக கூறிய அவர், கோர்ட்டுக்கு செல்லாமல் சென்சார் போர்டு சுட்டிக்காட்டிய தவறுகளை அவர்கள் நிவர்த்தி செய்திருக்கலாம் என்றார். மேலும், நாங்களும் ஜன நாயகன் எப்போது வரும், பார்க்கலாம் என்றுதான் காத்திருக்கிறோம் என பேசியுள்ளார்.

Similar News

News February 13, 2026

எம்எல்ஏ சந்திர பிரியங்கா புதிய ஆட்சியருக்கு நேரில் வாழ்த்து

image

காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் இஷிட்டா ரதி IAS அவர்களை நெடுங்காடு, கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா, இன்று (13.02.2026) காலை 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

News February 13, 2026

இளைஞர் மரணம்.. தவெக விளக்கம்

image

சேலத்தில் நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் சூரஜ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்ததாகவும், சூரஜிற்கு தவெகவினர் முதலுதவி அளித்து உரிய நேரத்தில் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்ற போதிலும் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாகவும் CTR நிர்மல்குமார் கூறியுள்ளார். இந்த எதிர்பாராத மரணத்திற்கு தவெக சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News February 13, 2026

இந்தியாவில் AI தாக்கம் ஆரம்பித்துவிட்டது: மாட் ஷமர்

image

இந்தியாவில் குறிப்பாக ஐடி மற்றும் சேவை துறைகளில் AI-ன் தாக்கம் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக ஹைப்பர்ரைட் CEO மாட் ஷமர் தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரையில் AI-யின் தாக்கத்தால் உடனடியாக வேலை இழப்புகள் ஏற்படவில்லை. ஆனால், வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வருங்காலங்களில் பட்டப்படிப்பை விட AI கருவிகளை பயன்படுத்தும் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!