News January 27, 2026
ஜன நாயகன் உடனடி ரிலீஸ்.. கடைசி வாய்ப்பு

‘ஜன நாயகன்’ வழக்கில் இன்று <<18972029>>ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பால்<<>> பட ரிலீஸ் மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், KVN நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, CBFC-ஐ நாடினால் உடனடியாக தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். CBFC பரிந்துரைத்த 14 CUT-ஐ செய்துவிட்டு மீண்டும் சமர்ப்பித்து கோரிக்கையாக வைத்தால் உடனடி தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
Similar News
News February 2, 2026
மாம்பழம் சின்னம் யாருக்கு?

மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ECI அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி, ராமதாஸ் தரப்பு சென்னை HC-ல் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய முடியாமல் தவித்து வரும் ராமதாஸ் தரப்பு, இந்த வழக்கின் தீர்ப்புக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
News February 2, 2026
மாரடைப்பை 10 வருடங்களுக்கு முன்பே அறியலாம்!

உடலில் தெரியும் சில அறிகுறிகளை வைத்தே, கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பே, மாரடைப்பு வரவுள்ளதை அறியலாம் என ‘JAMA Cardiology’ இதழின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென உடலில் சக்தி குறைவது, நல்ல தூக்கம் இல்லாமல் இருப்பது, உடல் உழைப்பின்றி இருப்பது போன்றவை பின்னாளில் இதய பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். அதுவே பல பிரச்னைகளை தடுக்கும். SHARE IT.
News February 2, 2026
DCM சுனேத்ரா பவார் மீது ₹25,000 கோடி மோசடி புகார்

சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி மோசடி புகாரே சரத் பவார், அஜித் பவார் அணியை மீண்டும் ஒன்று சேராமல் தடுத்து சுனேத்ராவை மீண்டும் NDA கூட்டணியில் இணைத்துள்ளதாம். 2002 – 2017 காலகட்டத்தில் MSCB வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாக அவர் மீதான மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு(EOW) போலீசார் அவரை விடுவித்தாலும், ED வழக்கை தூசித்தட்டி விசாரணை நடத்தி வருகிறது.


