News December 16, 2025
ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை

வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். ரேணிகுண்டாவில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு வரும் முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையொட்டி வேலூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.
Similar News
News December 17, 2025
ஆண்டாளாக மாறிய தமிழச்சி தங்கப்பாண்டியன் MP

மார்கழி மாத தொடக்கத்தையொட்டி திமுக MP தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்ஸ்டாவில் போட்ட போட்டோ SM-ல் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. ஆண்டாள் வேடமணிந்து அவர் பகிர்ந்துள்ள போட்டோவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துள்ளன. இந்நிலையில் தமிழச்சி போல திமுகவிலுள்ள மற்றவர்களும் சனாதன வெறுப்பை கைவிட்டு தமிழுக்கும் இந்து தர்மத்துக்கும் தொண்டாற்றியவர்கள் வரலாற்றை போற்றுவார்களா? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 17, 2025
ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழிக்க மோடி திட்டம்: ராகுல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றத்துக்கு ராகுல் காந்தி தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வந்த மோடி, இப்போது முழுவதுமாக அகற்றிவிட்டார் என அவர் சாடியுள்ளார். ஏற்கெனவே இளைஞர்களின் வேலைவாய்ப்பை அழித்த மோடி, அடுத்ததாக ஏழை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலக்கு வைத்துள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
News December 17, 2025
திருப்பதி போக பிளான் இருக்கா? இதோ டிக்கெட்!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட் நாளை தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு டிச. 24-ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் அர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை பெறவும், மேலும் விவரங்களை அறியவும் இங்கே <


