News December 26, 2025

ஜனவரி 9-ல் கூட்டணியை அறிவிப்போம்: பிரேமலதா

image

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவலை கொடுத்த கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டதாகவும் அவர் சாபம் கொடுத்துள்ளார். மேலும், வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாகவும், அந்த மாநாட்டின் போது, தங்களின் நிலைப்பாடு, கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 27, 2025

மகளிர் உரிமைத்தொகை இனி ₹2,500.. புதுவை CM அறிவித்தார்

image

புதுச்சேரியில் மகளிர் உரிமைத்தொகை ₹1,000-ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவையில் நடைபெற்ற வீரதீர குழந்தைகள் தினவிழாவில் பேசிய அவர், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். TN-ல் உரிமைத்தொகையாக ₹1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இது உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் கூறியிருந்தார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 27, 2025

கடலுக்கு அடியில் மர்ம உலகம்!

image

கிரீன்லாந்து கடலின் சுமார் 3,640 மீட்டர் ஆழத்தில், மனித கண்கள் காணாத ஒரு புதிய உலகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘மொல்லாய் ரிட்ஜ்’ ஆழ்கடல் பகுதியில், பூமியின் உட்புறத்திலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயு உறைந்து, பனிக்கட்டிகளாக மாறியுள்ளன. சூரிய ஒளியே படாத இந்த பகுதியில், மீத்தேன் வாயுவையே உணவாக கொண்டு வாழும் விசித்திர உயிரினங்கள் உயிர் சங்கிலியை உருவாக்கி, தனி உலகமாக காட்சியளிக்கிறது.

News December 27, 2025

நேருவை தொடர்ந்து துரைமுருகனுக்கு புதிய சிக்கல்!

image

TN-ல் மணல் ஒரு யூனிட் ₹20,000 வரை விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் ₹4,700 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக DVAC, DGP-க்கு ADMK சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் மீது உடனடியாக வழக்குப்பதிந்து விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே <<18146062>>அமைச்சர் KN நேருவின்<<>> துறையில் பணி நியமன முறைகேடு வாயிலாக ₹1,020 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக ED குற்றம்சாட்டியுள்ளது.

error: Content is protected !!