News January 29, 2025
ஜனவரி 31ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் வருகை

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வரும் ஜனவரி 31ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள மாவட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
Similar News
News August 24, 2025
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அடையாள அட்டை!

ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் திருப்பெரும்புதூர் சார் ஆட்சியர் ந.மிருநாலினி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம்.ஹிலாரினா, ஜோஷிடா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News August 23, 2025
காஞ்சிபுரத்தில் இந்த இடங்களை எல்லாம் நோட் பண்ணிக்கோங்க!

கோயில் நகரமான காஞ்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களை இங்கு காணலாம். ▶உத்திரமேரூர் கேதாரீஸ்வரர் கோயில் ▶ஊத்துக்காடு மகாலிங்கேசுவரர் கோயில் ▶ஏகனாம்பேட்டை திருவாலீஸ்வரர் கோயில் ▶காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ▶கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில் ▶கோனேரிக்குப்பம் வீரட்டானேசுவரர் கோயில் ▶குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில் ▶பனையூர் சிதம்பரேஸ்வரர் கோயில் ▶திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில். ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
காஞ்சிபுரத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

காஞ்சிபுரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? வீட்டு ஓனர் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக பெற வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!