News January 30, 2026
ஜனவரி 30: வரலாற்றில் இன்று

1948 – நாதுராம் கோட்சேவால் தேசப்பிதா மகாத்மா காந்தி, படுகொலை செய்யப்பட்டார். 1976 – தமிழ்நாட்டில் கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டது. 2020 – COVID-19ஐ உலக சுகாதார நிறுவனம் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. 1950 – முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி பிறந்த தினம். 1874 – ஆன்மிகவாதி இராமலிங்க அடிகளார் நினைவு தினம்.
Similar News
News February 10, 2026
BREAKING: காய்கறிகள் விலை குறைந்தது

கண்ணீரை வரவழைத்தாலும் வெங்காயம் மீதான உறவை மட்டும் நம்மால் கைவிடவே முடியாது. அப்படிப்பட்ட வெங்காயம் தற்போது 6 கிலோ ₹100-க்கு விற்பனையாவதால் 1 கிலோ ₹12 – 20 வரை சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கிறது. இதனால் இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், உருளை – ₹25, பீட்ரூட் – ₹10, கத்தரிக்காய் – ₹20 என குறைந்தே விற்பனையாகிறது. உங்கள் ஊரில் விலை நிலவரம் என்ன?
News February 10, 2026
அச்சத்துக்கு நடுவில் அரசுப் பள்ளி மாணவர்கள்: EPS

திருவாரூர், நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்கள் விஷப்பாம்பு, <<19093789>>விஷப்பூச்சி <<>>கடித்து உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சி அளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ? சுவர் தன் மீது விழுந்துவிடுமோ? போன்ற அச்சங்களுக்கு நடுவே தான் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். அரசுப்பள்ளியில் மாணவர்கள் வேலை வாங்கப்படுவதையும் EPS கடுமையாக கண்டித்துள்ளார்.
News February 10, 2026
தமிழ் மாணவர்களின் ஆற்றல் வியக்க வைக்கிறது: PM மோடி

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் PM மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்பத்திற்கு மாணவர்கள் அடிமையாகிவிடக்கூடாது என PM மோடி அறிவுறுத்தினார். மேலும் தேர்வு பற்றி, தான் எழுதிய புத்தகத்தில் உள்ள கருத்துகளை மாணவர்களுக்கு கூறினார். இதில் தமிழ்நாட்டு மாணவர்களின் ஆற்றல் மற்றும் ஆர்வம் தன்னை வியக்க வைத்ததாக மோடி பாராட்டியுள்ளார்.


