News January 29, 2026
ஜனவரி 29: வரலாற்றில் இன்று

*1939- சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். *1780 – இந்தியாவின் முதல் செய்தித்தாளான ஹிக்கியின் பெங்கால் கெஜட் தொடங்கப்பட்டது. 1953- ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டு இந்திய ஏர்லைன்ஸ் உருவானது. *1970 – இந்திய துப்பாக்கிச்சூடு வீரரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பிறந்ததினம். *2009 – ஈழத்தமிழர்களுக்காக தனக்குத்தானே தீயிட்டு உயிர்மாய்த்த முத்துக்குமார் நினைவுதினம்.
Similar News
News February 5, 2026
சபாநாயகருக்கு பின்னால் மோடி ஒளிகிறார்: பிரியங்கா

3 பெண் MP-க்கள், PM இருக்கைக்கு முன்னால் நின்றுகொண்டிருந்ததால், அவைக்கு வர மோடிக்கு துணிச்சல் இல்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அவைக்கு வராமல் சபாநாயகருக்கு பின்னால் <<19058063>>PM மோடி<<>> ஒளிந்துகொள்கிறார், இது என்ன முட்டாள்தனம் என்றும், பாஜக அரசு விவாதம் நடத்தவே விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக சுதா, ஜோதிமணி உள்ளிட்டோர் PM-ஐ முற்றுகையிட இருந்ததாக ஓம்பிர்லா சூசகமாக கூறியிருந்தார்.
News February 5, 2026
ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்படும்: ஐடி

மறைந்த CM ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட அவரது சொத்துக்கள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை சென்னை HC-ல் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. ₹13 கோடி வரி பாக்கி செலுத்தக் கூறி ஐடி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் சென்னை HC-ல் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த ஜன.31 வரை வருமான வரி பாக்கி வட்டியுடன் சேர்த்து ₹9.17 கோடி உள்ளது.
News February 5, 2026
விஜய்யிடம் நறுக்குன்னு என்ன கேட்கலாம்?

விஜய்யை பேட்டி எடுக்க சென்ற பத்திரிகையாளர்களை பேட்டி எடுத்து திருப்திப் பட்டுக்கொள்ளும் நிலையில் தான், விஜய்யின் மீடியா இன்டராக்சன் உள்ளது. இது சொந்த கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிரஸ்ஸை மீட் பண்ணாத அரசியல்வாதி, நாலு விஷயம் தெரிய வேண்டாமா என EPS நேரடியாகவே விஜய்யை அட்டாக் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஒருவேளை விஜய் மீடியாவை சந்தித்தால் என்ன கேள்வி கேட்கலாம்? கமெண்ட் பண்ணுங்க.


