News January 28, 2026

ஜனவரி 28: வரலாற்றில் இன்று

image

1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. 1933 – பாகிஸ்தான் என்ற பெயர் சௌத்ரி ரஹ்மத் அலியால் உருவாக்கப்பட்டது. 1865 – இந்திய சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பிறந்த தினம். 1986 – நடிகை ஸ்ருதி ஹாசன் பிறந்த தினம். 1997- சிறுபான்மையின சமூக ஆர்வலர் பழனி பாபா நினைவு தினம்.

Similar News

News February 5, 2026

விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை

image

திமுக, அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக TN வணிகர் சங்கம் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். இவர்களிடம் சங்கத்தினரின் கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளதாக கூறிய அவர், இதனை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், வணிகர் சங்கத்தின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

News February 5, 2026

பிரபல தமிழ் சீரியல் நடிகை காலமானார்

image

பிரபல சீரியல் நடிகை வாஹினி (எ) பத்மாக்கா (48) காலமானார். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மறைந்ததாக அவரது நெருங்கிய தோழி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமா & சீரியல்களில் நடித்து பிரபலமானவர். MS பாஸ்கர் உடன் தமிழ் சீரியலில் நடித்துள்ள இவர், தெலுங்கு சீரியல்களில் வில்லி ரோல்களில் நடித்து கவனம் பெற்றவர். இவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News February 5, 2026

TN-ல் டார்கெட் பிக்ஸ் செய்தார் PM மோடி.. இதான் பிளான்!

image

மதுரையில் பிப்.28-ம் தேதி நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டத்தில் பங்கேற்க PM மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த கூட்டத்தின் மேடையில் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளையும் கொண்டுவர சேர்க்க பாஜக தீவிரம் காட்டி வருகிறதாம். மதுரையில் இக்கூட்டம் நடைபெறுவதால் திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து PM பேசலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!