News January 21, 2026
ஜனவரி 21: வரலாற்றில் இன்று

*1924 – சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மறைந்தார். *1945 – இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மறைந்தார். *1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியவை இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன. *2009 – செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் அமைக்கப்பட்டது. *2017 – தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் உச்சத்தை எட்டியது.
Similar News
News April 3, 2026
வரியே கட்டாமல் ஏமாற்றும் விஜய்: MRK பன்னீர்செல்வம்

நடிகர்கள் ஏமாற்றிவிடுவார்கள்; கொள்கை உள்ளவர்கள்தான் தேவை என MRK பன்னீர் செல்வம் பேசியுள்ளார். திண்டிவனம் வேட்பாளர் வன்னியரசை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், சிலர் கட்சி தொடங்கிய உடனே CM ஆக வேண்டும் என்ற கனவில் இருப்பதாக கூறினார். மேலும், வரியே கட்டாமல் நாட்டை ஏமாற்றுபவர், நாட்டு மக்களை ஏமாற்றமாட்டாரா எனவும், பிளாக்கில் டிக்கெட் விற்பவர்கள் எல்லாம் வேண்டுமா என்றும் மறைமுகமாக விஜய்யை சாடியுள்ளார்.
News April 3, 2026
வெள்ளி ஆபரணங்கள்.. கிலோவுக்கு ₹10,000 குறைந்தது

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹800 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லை. இதனால் இன்றும் 1 கிராம் வெள்ளி ₹255-க்கும், 1 கிலோ ₹2.55 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. ஏப்.1-ல் 1 கிலோ ₹2.65 லட்சத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது ₹10,000 குறைந்துள்ளது. இன்று முதல் 3 நாள்கள் விடுமுறை என்பதால், வெள்ளி நகை பிரியர்கள் நகைக்கடைகளில் குவிகின்றனர்.
News April 3, 2026
டெல்லி தலைமைக்கு டிமாண்ட் வைத்த அண்ணாமலை ?

தமிழ்நாடு பாஜக தலைமையோடு முரண்பாடு ஏற்பட்டதால், அண்ணாமலையை டெல்லி தலைமை தொடர்ந்து சமரசம் செய்து வருகிறதாம். இந்நிலையில், கோவை வடக்கு தவிர வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன் என்றும், தனது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் எனவும் டெல்லி தலைமையிடம் அண்ணாமலை உறுதியாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிட தாமதம் என கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>


