News January 20, 2026
ஜனவரி 20: வரலாற்றில் இன்று

*1841 – ஹாங்காங் தீவு பிரிட்டனால் கைப்பற்றப்பட்டது. *1859 – தமிழறிஞர், மொழி ஆய்வாளர் சவரிராயர் பிறந்த தினம். *1990 – அசர்பைஜான் விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் ராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. *1964 – இந்திய விமானப்படை MiG-21 போர் விமானத்தை அதிகாரப்பூர்வமாக சேவையில் இணைத்தது. *2009 – பராக் ஒபாமா, அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.
Similar News
News January 25, 2026
அலர்ட்.. 12 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

குளிர் காலமே மெல்ல மெல்ல விலகி வரும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை செங்கை, மயிலாடுதுறை, சென்னை, கடலூர், காஞ்சி, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதனால், மாலை நேரங்களில் அவசியமின்றி வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!
News January 25, 2026
சினிமா பாணியை மாற்றுவாரா விஜய்?

கட்சி தொடங்கியது முதலே இலைமறைக்காயாகவே விஜய் பேசி வருகிறார். இன்று கூட <<18953053>>திமுக,<<>> அதிமுகவை மறைமுகமாகவே விமர்சித்தார். வேலுநாச்சியார் வரலாறைக் கூறி, <<18953147>>கூட்டணி<<>> பற்றிய நிலைப்பாட்டையும் (தனித்து போட்டி) மறைமுகமாகவே தெரிவித்தார். இவ்வாறு பேசுவது சினிமாவுக்கு நன்றாக இருக்கலாம், பொதுமக்களிடம் தெளிவான புரிதலை ஏற்படுத்துமா என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News January 25, 2026
பத்ம பூஷண் விருது வென்ற மார்க் டல்லி காலமானார்

வரலாற்று ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத் திறமை கொண்ட மார்க் டல்லி(90) உடல்நலக் குறைவால் காலமானார். கொல்கத்தாவில் பிறந்த இவர், பிபிசியின் தலைமை பொறுப்பில் 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்தியா பற்றி பல புத்தகங்களை எழுதிய டல்லிக்கு, பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. அவரது மறைவுக்கு ‘VOICE OF INDIA’ என குறிப்பிட்டு பிபிசி இரங்கல் தெரிவித்துள்ளது.


