News January 14, 2026
ஜனவரி 14: வரலாற்றில் இன்று

*போகி பண்டிகை. *1761 – 3-ம் பானிபட் போர் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதில் ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. *1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. *1951 – ஓ. பன்னீர்செல்வம் பிறந்தநாள்.
Similar News
News January 25, 2026
செங்கோட்டையனுக்கு நெருக்கடி

அதிமுக கூட்டணியில் TTV இணைந்த நிலையில், இதைத்தான் EPS-யிடம் அப்போவே செய்யச் சொன்னேன்; ஆனால் என்னை வெளியே அனுப்பி அனுப்பிவிட்டாரே என்று செங்கோட்டையன் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தவெகவில் இணைந்து சில மாதங்கள் ஆகியும் பொறுப்பு வழங்காததால், KAS-ஐ நம்பி வந்தவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது, KAS-க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாம்.
News January 25, 2026
தவெகவுக்கு 40% ஓட்டு: CTR நிர்மல்குமார்

ஆளுங்கட்சியின் குற்றங்களை தேர்தல் அன்று விசில் ஊதி மக்கள் வெளிப்படுத்த தயாராகி வருவதாக CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், TN-ல் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் தவெகவுக்கு ஒரு வாக்கு இருப்பதாகவும், அண்மையில் திமுகவுக்கு தேர்தல் வேலை செய்யும் நபர் ஒருவர், தவெகவுக்கு 40% வாக்குகள் கிடைக்கும் என தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
News January 25, 2026
நாளை வங்கிக் கணக்கில் ₹2,000.. SCAM ALERT

குடியரசு தினத்தையொட்டி, நாளை ஏழை மக்களுக்கு PM மோடி ₹2,000 வழங்கவிருப்பதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஆடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம், இந்த தகவல் முற்றிலும் தவறானது எனவும், இதுபோன்ற அறிவிப்பை மோடி வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அரசின் திட்டங்களை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


