News March 28, 2024

ஜனநாயக முறையில் தேர்தல் நடக்குமா?

image

துறையூரில் இன்று மாலை பாலக்கரை கலைஞர் திடலில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுகிறதா? தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா? என கேள்வி எழுப்பினார்.

Similar News

News January 26, 2026

திருச்சி: சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு!

image

திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சார்பில், பிரெயில் (BRAILLE) எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடும் நிகழ்ச்சி, திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வானது வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் இந்திய நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்றதில், மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி கலந்து கொண்டு அதனை வெளியிட்டார்.

News January 26, 2026

நவல்பட்டு: துணை முதல்வரை வரவேற்ற ஆட்சியர்

image

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வருகை தந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் பூங்கொத்து வழங்கி வரவேற்பளித்தார். இந்நிகழ்வில் அரசுத் துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News January 26, 2026

திருச்சி: கண் குறைபாடுகளை நீக்கும் கோயில்!

image

திருச்சி, துவாக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், பொய்கைக்குடிக்கு அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!