News January 11, 2026
‘ஜனநாயகன்’ to ‘டாக்ஸிக்’ வரை.. யார் இந்த KVN?

‘ஜனநாயகன்’, ‘டாக்ஸிக்’, மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படம் என பல முக்கிய பிரமாண்ட படங்களை KVN நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் நிறுவனர் பெங்களூருவை சேர்ந்த வெங்கட் கே.நாராயணன், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். ஆரம்பத்தில் கர்நாடகாவில் திரைப்பட விநியோகஸ்தராக தொடங்கிய இவரது பயணம் பிரமாண்ட படங்களை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
Similar News
News January 21, 2026
புதன்கிழமையில் செல்வத்தை குவிக்கும் மகாலட்சுமி வழிபாடு

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று வீட்டில் மகாலட்சுமிக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து, பிரசாதம் படைத்து வழிபடுங்கள். பூஜை செய்யும்போது, லட்சுமி அஷ்டோத்திரம் மந்திரங்களை சொல்லி வணங்கலாம். இதனால், குழந்தைகளின் கல்வி மேம்படும். திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். SHARE IT.
News January 21, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $106.00 உயர்ந்து $4,784.53-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $0.75 உயர்ந்து $95.33 ஆக உள்ளது. இதனால், இன்று (ஜன.21) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 21, 2026
இன்று மாலை தவெக பிரசாரக் குழு கூட்டம்

பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பேரவை தேர்தலை முன்னிட்டு, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


