News January 8, 2026
ஜனநாயகன் ரீலீஸ் இல்லை.. அபிஷியல் அறிவிப்பு

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை ஜன.9-ம் தேதி ரிலீஸ் செய்யமுடியவில்லை என்றும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ரசிகர்களின் ஆதரவே படக்குழுவுக்கு மிகப்பெரிய பலம் என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது
Similar News
News January 26, 2026
கிராம உதவியாளருக்கு சான்று வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ. நெமிலி கிராமத்தில் பணிப்புரியும் கிராம உதவியாளர் ஏழுமலைக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நற்சான்றிதழ் வழங்கி அவரை கௌரவித்தார். இந்த நிகழ்வின்போது திருக்கோவிலூர் கோட்டாட்சியர் ராஜசேகர் சிங் உடன் இருந்தார்.
News January 26, 2026
உணவு ஆர்டர் பண்றீங்களா? அப்ப இதை கவனிங்க

ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்யும்போது, பொதுவாக கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் உணவுகள் டெலிவரியாகின்றன. பலரும் வீடுகளில் இந்த டப்பாக்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர். இது <<15493487>>மிக ஆபத்தானது<<>> என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள BPA, phthalates உள்ளிட்ட நச்சு ரசாயனங்கள் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகமாம்.
News January 26, 2026
தேமுதிகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை

கூட்டணியை இதுவரை இறுதி செய்யாத தேமுதிகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக – பாஜக தரப்பு தொடங்கியிருக்கிறது. குடியரசு தினத்தையொட்டி, கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற தேமுதிக பொருளாளர் எல்.கே.சதீஷுடன் நயினார் நாகேந்திரனும், அதிமுக தலைவர்களும் 10 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


