News March 17, 2026

ஜனநாயகன் ரிலீஸ் தேதி.. ஹேப்பி நியூஸ்

image

தணிக்கை சான்று கிடைக்காததால் ஜனநாயகன் ரிலீசில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், ரிவைஸிங் கமிட்டி நாளை படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு சில காட்சிகளை கட் செய்யும்படி அறிவுறுத்தும் என கூறப்படுகிறது. அதன்பிறகு, தணிக்கை சான்று கிடைத்தவுடன் ரிலீசுக்கான வேலைகளை படக்குழு தொடங்கவுள்ளதாம். தேர்தல் முடிவுகளுக்கு(மே.4) பிறகு மே.7-ல் ஜனநாயகன் ரிலீசாகும் என கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News March 28, 2026

தூத்துக்குடியில் டீ, காபி விலை உயர்வு

image

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள டீக்கடைகளில் நேற்று முதல் டீ மற்றும் வடைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதில் டீ, காபி முன்பு 12-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அவை ரூ.15 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வடை, சமோசா ரூ.12 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.

News March 28, 2026

சிவகங்கை: சிறுமி பாலியல் வன்கொடுமை; ஒருவருக்கு சிறை

image

தேவகோட்டையை சோ்ந்த தொழிலாளி அஜித்குமாா் 2017ம் ஆண்டு குன்றக்குடி பகுதியில் வேலைக்கு சென்ற போது அப்பகுதியை சோ்ந்த 9ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கானது சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் சிறுமியை கடத்தி சென்றதற்காக 3 ஆண்டுகளும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News March 28, 2026

அதிமுக முந்தியது.. ஸ்டாலின் அதிர்ச்சி

image

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை 2026 தேர்தலின் ஆரம்பப் புள்ளியாக வைத்த திமுக, இதுவரை பேச்சுவார்த்தையை நிறைவு செய்யவில்லை. இந்நிலையில், நாங்கள் (NDA) 4 நாள்களில் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டோம்; ஆனால் திமுக கூட்டணியில் 25 நாள்களை கடந்தும் இழுபறிதான் நீடிக்கிறது என்று EPS விமர்சித்துள்ளார். தேர்தல் அறிக்கை, 150 வேட்பாளர்கள் என அரசியலில் அதிமுகவின் வேகம், ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

error: Content is protected !!