News December 24, 2025
ஜனநாயகன் ரிலீஸாவதில் சிக்கலா?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை ஆந்திரா, தெலங்கானாவில் வெளியிடவிருந்த நிறுவனங்கள் திடீரென பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், பாலிவுட் மாநிலங்களிலும் பட புரமோஷன் சரியாக செய்யாததால், அங்கும் ரிலீஸில் சிக்கல் ஏற்படலாம் என தெரிகிறது. இவையெல்லாம் உண்மையானால் பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே, இதையெல்லாம் உடனடியாக படக்குழு சரிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Similar News
News December 28, 2025
மகளிர் உரிமைத் தொகை உயர்வு… மகிழ்ச்சியான அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். தொகை எவ்வளவு அதிகரிக்கப்படும் என்ற தகவலை, தேர்தலுக்கு முன்பாக அடுத்தாண்டு மார்ச்சில் அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ₹1,000 ஆக இருக்கும் உரிமைத் தொகை ₹1,500 ஆக உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது, 1.3 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News December 28, 2025
குளிர் காலத்தில் தயிர் சாப்பிடலாமா?

குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில் அப்படியல்ல. தயிரை அப்படியே பிரிட்ஜில் இருந்து எடுத்து சாப்பிடாமல், வெளியே எடுத்து அரை மணி நேரம் கழித்து உட்கொள்வது நல்லது. மேலும், நமக்கு குளிர்காலத்தில் இயல்பாகவே வழக்கத்தை விட அதிகமாக பசி எடுக்கும். அப்போது கனமான உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடுவது எளிதில் ஜீரணிக்க உதவும். அஜீரணத்தையும் குறைக்கும்.
News December 28, 2025
அசாம் வங்கதேசத்துடன் இணையப் போகிறதா?

அசாமில், வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 40%-ஐ தாண்டிவிட்டதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். பாஜக கூட்டத்தில் பேசிய அவர், இந்த எண்ணிக்கை 50%-ஐ எட்டினால், அசாமை வங்கதேசத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அசாமின் கலாசாரமும் அடையாளமும் ஒரு மிகப்பெரிய ‘நாகரிகப் போரை’ சந்தித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.


