News January 9, 2026

ஜனநாயகன் பிரச்னை சாதாரணம் தான்: கார்த்தி சிதம்பரம்

image

ஜனநாயகன் சென்சார் விவகாரத்தை TN-ன் மைய பிரச்னை என்று சொல்வதை ஏற்க முடியாது என காங்., MP கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்காததை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில், ஏன் சென்சார் கொடுக்கவில்லை என்று எனக்கு தெரியாது. நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கும். இது சாதாரண விசயம் தான் என கார்த்தி கூறியுள்ளார்.

Similar News

News January 24, 2026

கணவரை பங்கு போடுவதில் மனைவிகளுக்குள் போட்டி

image

ஒரு மனைவியை வைத்து சமாளிப்பதே இங்கு பலருக்கும் சவாலாக உள்ள நிலையில், உ.பி.,யில் 2 மனைவிகளை கட்டியவரின் கதை வேற லெவல். `எம் புருசன், எனக்கு தான்’ என 2 மனைவிகளுக்குள் குடுமிபிடி சண்டை வந்தது. இதுக்கு என்னடா தீர்வுன்னு பஞ்சாயத்துக்கு 2 பேரும் போக, அங்கு சொன்ன தீர்ப்புதான் அல்டிமேட். வாரத்தின் 3 நாள்கள் இங்கும், 3 நாள்கள் அங்கும் இருக்க வேண்டும் எனவும், Sunday லீவ் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

News January 24, 2026

அலர்ட்.. 8 மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டும்

image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூரில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. மேலும், வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 24, 2026

NDA ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி: செல்வப்பெருந்தகை

image

முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணியாக, அதிமுக கூட்டணி உள்ளதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். நாட்டிலேயே பாஜகவை கடுமையாக எதிர்க்கின்ற மாநிலமாக தமிழகம் இருப்பதை, PM மோடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு தமிழகம் மீது காட்டும் பாரபட்ச போக்கே தமிழக மக்கள் பாஜகவை தோற்கடிப்பதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!