News January 5, 2026
‘ஜனநாயகன்’ திரையிடுவதில் இப்படி ஒரு சிக்கலா?

‘ஜனநாயகன்’ படத்திற்கு விநியோகஸ்தர்கள் 75% பங்கு கேட்பதால், தியேட்டர்களுடனான ஒப்பந்தம் முழுமையடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்ச டிக்கெட் விலையான ₹190-ஐ எடுத்துக் கொண்டால், ₹42 வரிக்கு போய்விடும். மீதமிருக்கும் ₹148-ல் விநியோகஸ்தர்களுக்கு ₹111, தியேட்டர்களுக்கு ₹37-ம் கிடைக்கும். இதில் மின்சாரம், பராமரிப்பு போக தங்களுக்கு லாபம் இருக்காது என தியேட்டர் உரிமையாளர்கள் தயங்குகிறார்களாம்.
Similar News
News January 22, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி இணைந்தது

சென்னையில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சந்தித்து ஆலோசித்துள்ளார். கடைசி நேரத்தில் கூட கூட்டணி கணக்கு மாறக்கூடும் என சமீபத்தில் அவர் கூறியிருந்ததால், தமமுக அணி மாறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பியூஷ் கோயலை சந்தித்து, அதிகாரப்பூர்வமாக NDA கூட்டணியில் இணைந்துள்ளார். அவருக்கு தென் மாவட்டங்களில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News January 22, 2026
நகைக் கடன்.. வந்தாச்சு மகிழ்ச்சியான செய்தி

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்கப்படுவதாக கூட்டுறவு சங்கங்கள் தெரிவித்துள்ளன. சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்கள், பட்டா ஆவணத்தையும், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்பவர்கள், உரிய குத்தகை ஒப்பந்த ஆவணத்தையும் வழங்க வேண்டும். இதனுடன் அடையாள ஆவணங்கள், நகை விவரங்களையும் சமர்ப்பித்தால், தாமதமின்றி உடனே விவசாய நகைக்கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 22, 2026
காங்.,க்கு ஒரு கவுன்சிலர் பதவி கூட கிடைக்காது

NDA கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி என்று விமர்சித்த செல்வப்பெருந்தகைக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளார் பாப்புலர் முத்தையா பதிலடி கொடுத்துள்ளார். காங்., கட்சி தமிழகத்தில் கிடையாது; தனித்து நின்றால் ஒரு கவுன்சிலர் பதவி கூட வாங்க முடியாது என்று விமர்சித்தார். 2001-ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது இனித்தது; தற்போது மட்டும் கசக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.


