News January 14, 2026
‘ஜனநாயகன்’ சரியான நேரத்தில் வெளியாகும்: கார்த்தி

‘ஜனநாயகன்’ படம் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்தில் வெளியாகும் என நம்புவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தனது முதல் படத்தில் தொடங்கி தற்போதைய ‘வா வாத்தியார்’ வரையிலும் பல தடங்கலை கடந்தே படங்கள் வெளியாவதாகவும், ஒரு நல்ல கதை தனக்கு தேவையானதை தானே அமைத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, நமது கட்டுப்பாட்டில் இல்லாதவை குறித்து கவலைப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2026
விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார இறுதி, தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி, மக்கள் ஊர்களுக்கு செல்ல, நாளை (ஏப்.10) முதல் 5 நாள்களுக்கு சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலாக 2,119 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். <
News April 9, 2026
தவெக மீது ஒரே நாளில் 12 வழக்குகள்

தூத்துக்குடியில் விஜய் நேற்று பிரசாரம் செய்தபோது பல விதிகளை மீறியதாக அவர் உள்பட நிர்வாகிகள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றது, அனுமதிக்கப்படாத இடங்களில் கட்சி கொடி பயன்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக வழக்குகள் பதிவாகியுள்ளன. ஏற்கெனவே பெரம்பூரில் பிரசாரத்தில் விஜய் விதி மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.
News April 9, 2026
கோடை மழை.. 12 மாவட்டங்களில் அலர்ட்

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்தாலும், ஏப்.15 வரை மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறதாம். குறிப்பாக, இன்று குமரி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் அடுத்த 1 வாரத்திற்கு குடையை மறக்காதீங்க! SHARE IT


