News January 8, 2026
ஜனநாயகன் ஒத்திவைப்பால் விஜய் அதிர்ச்சி!

‘ஜனநாயகன்’ ரிலீஸ் பிரச்னையால் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18793942>>இரவில் KVN நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால்<<>> விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே கரூர் விவகாரத்தில் வரும் 12-ம் தேதி நேரில் ஆஜராக CBI சம்மன் அனுப்பியுள்ளதால் அவர் அதிர்ச்சியில் உள்ள நிலையில், இது அடுத்த அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விஜய், ரசிகர்களும் SM-ல் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
மத்திய அரசை எதிர்ப்பதே திமுகவின் சாதனை: வானதி

செலவின கணக்கை சொல்லாமல், பொத்தாம் பொதுவாக நிதி வரவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டுவதாக வானதி சாடியுள்ளார். ஸ்டிக்கர் ஒட்டுவதையும், மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை மட்டுமே சாதனையாக வைத்து திமுக ஆட்சி நடத்துவதாகவும் விமர்சித்துள்ளார். TN-ன் தொழில் வாய்ப்புகள் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றும், அமைச்சர்கள் மீதான புகார்களுக்கு எந்த விளக்கமும் அரசுத் தரப்பில் இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார் .
News January 24, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை, மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை ₹560 உயர்ந்த நிலையில், மதியம் ₹1,040 உயர்ந்துள்ளது. இதனால் ஒரேநாளில் கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹14,750-க்கும், சவரனுக்கு ₹1600 உயர்ந்து ₹1,18,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News January 24, 2026
சற்றுமுன்: விஜய் மாற்றினார்

தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்தது முதலே அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், விஜய்யின் X பக்க கவர் போட்டோ மாற்றப்பட்டுள்ளது. அதில் விசில் சின்னம் இடம்பெற்றது மட்டுமல்லாது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற வார்த்தைகளில் வழக்கமான சிவப்பு, மஞ்சள் நிறங்களுடன் மேலும் சில நிறங்களும் இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது. எதற்காக இவை பயன்படுத்தப்பட்டன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.


