News January 20, 2026

ஜனநாயகனுக்கு இன்று தீர்வு கிடைக்குமா?

image

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் தொடர்பான வழக்கு இன்று சென்னை HC-ல் விசாரிக்கப்படவுள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டதற்கு எதிராக, திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், இன்றாவது தீர்வு கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Similar News

News February 3, 2026

அண்ணாமலை விலகல்.. நயினார் விளக்கம்

image

நயினார் மீதான <<19039038>>அதிருப்தியால் <<>>அண்ணாமலை பதவி விலகியதாக செய்திகள் வெளியாகின. தேர்தல் வரவிருக்கும் நிலையில், அவரின் விலகல் அரசியல் ரீதியாக பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து பேசிய நயினார், தந்தை உடல்நிலை காரணம் என அண்ணாமலையே சொல்லிவிட்டபின், ஏன் இப்படி பொய்யான தகவல் வெளியானது என்று எனக்கு தெரியவில்லை. பாஜகவை பொருத்தவரை தனிப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

News February 3, 2026

இன்னும் 5 வருடத்தில் இவை இல்லாமல் போகலாம்!

image

டெக்னாலஜி என்றும் வளர்ச்சியடைய கூடியதே. ஒரு காலத்தில் அனைவரது வீட்டிலும் இருந்த ரேடியோ இன்று அட்ரஸே இல்லாமல் ஆகிவிட்டது. அப்படித்தான் தற்போது நாம் யூஸ் பண்ணும் பல விஷயங்களும், டெக்னாலஜியின் வளர்ச்சியால் இன்னும் 5 ஆண்டுகளில் வழக்கொழிந்து போகலாம். அவற்றில் சிலவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். வலதுபக்கம் Swipe செய்து பார்க்கவும். காலப்போக்கில் இன்னும் எவையெல்லாம் மறையும் என நினைக்கிறீங்க?

News February 3, 2026

அதிமுக-பாஜக கூட்டணியில் வெளிப்படையாக மோதல்

image

அதிமுக பாஜக கூட்டணியில் சீட் ஷேரிங் விஷயத்தில் மோதல் வெடித்துள்ளது. தற்போது திமுகவின் கோட்டையாக விளங்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில், அவர்களை எதிர்த்து போட்டியிட பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் 2016-ல் இந்த தொகுதியின் MLA-வாக இருந்த KS.தென்னரசுக்கு இதில் உடன்பாடில்லை. எனவே, ஈரோடு கிழக்கை பாஜகவுக்கு ஒதுக்கினால் அதிமுகவினரே தோற்கடித்துவிடுவார்கள் என அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

error: Content is protected !!